உங்கள் கணினியில் Enterprise Linux ஐ துவக்க மென்பொருள் துவக்க இயக்கியை உபயோகிக்கலாம். இது விண்டோஸ் 9x போன்ற மற்ற இயங்குதளங்களையும் துவக்க பயன்படும். Enterprise Linux ஐ நீங்கள் பயன்படுத்தினால் மென்பொருள் துவக்க இயக்கி தானாகவே கண்டுபிடிக்கப்படும்.
உங்கள் தேர்வுகள்:
துவக்க இயக்கி உள்ளமைப்பை மேம்படுத்து — தற்போது உள்ள இயக்கியை உபயோகிக்க அப்படியே பயன்படுத்த (GRUB அல்லது LILO நீங்கள் நிறுவி உள்ள இயக்கியை பொருத்து) மற்றும் மேம்படுத்த இந்த தேர்வை பயன்படுத்தவும்
துவக்க இயக்கி மேம்படுத்தலை தவிர் — தற்போதுள்ள துவக்க இயக்கியில் மாற்றங்கள் செய்ய இந்த தேர்வை பயன்படுத்தவும் நீங்கள் மற்ற நிறுவனங்களின் துவக்க இயக்கியை பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த மேம்படுத்தல் அவசியமில்லை.
புதிய துவக்க இயக்கி அமைப்பை உருவாக்கு — உங்கள் கணினியில் புதிய துவக்க இயக்கியை அமைக்க விரும்பினால் இந்த தேர்வை பயன்படுத்தவும். தற்போது நீங்கள் LILO வை பயன்படுத்துகிறீர்கள் ஆனால் GRUB க்கு மாற விரும்புகிறீர்கள் என்றாலோ அல்லது உங்கள் Enterprise Linux மென்பொருள் துவக்க இயக்கியான LILO அல்லது GRUB ஐ பயன்படுத்த வேண்டுமென்றாலோ புதிய துவக்க இயக்கியை உருவாக்க வேண்டும்.
தேர்வு செய்த பிறகு,அடுத்துஎன்பதை க்ளிக் செய்து தொடரவும்.